Siddha medical texts
இதில் கீழ்க்கண்ட சித்த மருத்துவ நூல்கள் உள்ளன.
1. சரபேந்திர வைத்திய ரத்னாவளி
2. குன்ம ரோக சிகிச்சை
3. கர்ப்பிணி பாலரோக சிகிச்சை
4. நயன ரோக சிகிச்சை
5. சிரோ ரோக சிகித்ஸை
6. காஸ, சுவாஸ சிகிச்சை
7. நீரிழிவு சிகிச்சை
8. ஜ்வரரோக சிகிச்சை
9. விரண ரோக, கரப்பான் ரோக சிகித்ஸை
10. பாண்டு காமாலை சிகிச்சை
11. க்ஷய ரோக, உளமாந்தை ரோக சிகிச்சை
12. வாத ரோக சிகிச்சை
13. பித்த ரோக சிகிச்சை
14. சந்நி ரோக சிகிச்சை
15. சூலை, குஷ்டம், மூலம், பித்தம்
16. பேதி முறைகளும் அதிசார சிகிச்சையும்
17. விஷ ரோக சிகிச்சை
18. ஆயுர்வேத உபதேசங்கள் பாகம் 1
19. ஆயுர்வேத உபதேசங்கள் பாகம் 2
20. கரப்பிணீ ரக்ஷை
முதல் நூல் அரச பரம்பரையினரின் உபயோகத்திற்காக கைகண்ட முறைகளை தொகுத்து மன்னரது குடும்பத்தினர் உபயோகித்து வந்தனர்.
நூல்கள் 2-17 வரை உள்ளவை சரபோஜி மன்னரால் தொகுத்து சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் வரையில் ஒலைச்சுவடிகளிலேயே இருந்து வந்தது.
18-20 வரை உள்ளவை, எளிய நடைமுறைகள் வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து, சரஸ்வதி மகால் வெளியிட்டவை. இவை அனைவருக்கும் இன்றியமையாததாகும்.
சுதந்திரத்திற்குப் பின் இவைகளை அச்சிலேற்றி பாமர மக்கள் பயன் பெற மத்திய/மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இவைகள் வெளி வந்தன. தற்சமயம் இந்நூல்கள் https://www.tamildigitallibrary.in/ எனும் இணைய தளத்தில் அனைவரும் இலவசமாக உபயோகிக்க pdf படிவத்தில் உள்ளது. இலகுவாக உபயோகிக்க, இவைகளை எழுத்து வடிவத்தில் மாற்றி, தேடும் வசதியுடன் இம்மென்பொருளை செய்துள்ளோம்.
இதில் கிட்டத்தட்ட 4,900 சிகிச்சை முறைகள் உள்ளன. சில வீட்டிலேயே மருத்துவர் உதவியின்றி உபயோகிக்கலாம். பல, மருத்துவர்கள் மட்டுமே கையாள முடியும். அதிலும் சில மூலிகைகள் மற்றும் சில பொருட்கள் கிடைப்பது அரிதாகையால், செய்வது மிகச் சிரமம்.
இதில், நோய்களின் குணங்கள், சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்துடன் ஒப்பீடு, அனைத்துவித நோய்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன. நோய்களைப் பற்றியும் அறிய வாய்ப்பு உள்ளது. முன்போல் பாடல்களைப் படித்து மனப்பாடம் செய்து அவசரத்திற்கு ஓலையைத் தேட வேண்டிய சிரமம் இருக்காது.
இம்மென்பொருளை உபயோகித்து அனைவரும் நோய்கள் நீங்கி நலமாக வாழ நமது பிரார்த்தனைகள்.