Rare Family Secrets of Hereditary Pathology
அனுபோக வைத்திய நவநீதம் பாகம் - 8 இதில் உள்ளது. இதன் ஆசிரியர் ஹக்கீம் பா. மு. அப்துல்லா ஆவார். இதிலுள்ள சிக்ச்சை முறைகள் மிகவும் அரியது என்பது ஒரு பார்வையிலேயே புலப்படுகிறது.
இதில் பல்வேறு சர்பத் வகைகள், இளகங்கள், வில்லை மற்றும் பலவித மருந்துகள் பல்வேறு நோய்களுக்காக உள்ளன. பெரும்பாலனவைகளை இலகுவாக செய்து கொள்ளலாம்.
அனுபோக வைத்திய நவநீதம் பாகங்கள் 1 முதல் 10 வரையிலும், அதன் திறவுகோல் ஒரு நூலும் ஆசிரியர் ஹக்கீம் பா. மு. அப்துல்லா, அவர்களால் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்டது. அந்நூலில் உள்ள முகவுரையிலிருந்து தெரிவதாவது, அந்நூல்களில் உள்ள சிகிச்சை முறைகள் பலவும் பல்வேறு ஆசிரியர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மறைத்து வைத்து செய்யப்பட்ட சிகிச்சைகளை அரும் பாடுபட்டு சேகரித்து அவைகளில் சிறந்த சிலவற்றை அந்நூல்களில் சேர்த்து அனைவரும் பயன்பெற எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.
அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சித்த மருத்துவ நூல் வெளியீட்டுக்குழுவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. ஆசிரியர் பயந்தது போலவே அவரது 50-க்கும் மேற்பட்ட நூல்களில், பதினைந்து நூல்களும் கூட தற்சமயம் எங்கும் இல்லை.
தமிழ் மக்கள் குறிப்பாக சித்த மருத்துவர்கள் இந்நூலையும், இதன் பின் வரும் மற்ற ஒன்பது நூல்களையும் உபயோகித்து அரிய நோய்களை தீர்த்து தமிழக மக்களை கொடிய நோய்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு, சித்த மருத்துவத்தின் மேன்மையை உலகுக்கு எடுத்துக் காட்டுவார்கள் என நம்புகிறோம்.